விவசாயிகளுக்கு உதவிய ஒபிலியா புயல்

அயர்லாந்தில் ஏற்பட்ட ஒபிலியா புயலால் விவவசாயிகள் நன்மைடைந்துள்ளனர்.

ஒபிலியா புயலால் கட்டிடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ள போதிலும், டிப்பெயரி பகுதி ஆப்பிள் தோட்ட விவசாயிகளுக்கு மட்டும் நன்மை கிடைத்துள்ளது.

இந்த சீசனில் ஆப்பிள்கள் அதிகமாக தோட்டத்தில் விளைந்திருந்தன. இதனைப் பறிப்பது என்பது பல வாரங்களுக்கு செய்ய வேண்டிய கடினமான பணியென விவசாயிகள் நினைத்திருந்த போது, ஒபிலியா புயல் ஒரே இரவில் அனைத்து ஆப்பிள்களையும் நிலத்தில் தள்ளிவிட்டது.

மழையில் ஆப்பிள்கள் அடித்துச் செல்லப்படாமல், போர்வை விரித்ததுபோல் நிலமே தெரியாதவாறு ஆப்பிள்களால் தோட்டம் மூடப்பட்டிருந்ததுடன், இந்த புயலால் பழங்கள் எந்த விதத்திலும் சேதமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு