குட்டி இளவரசரை குறிவைக்கும் ஐ.எஸ். தீவிரவாதம்

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொலைப்பட்டியலில் பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் – கேத் மிடில்டன் தம்பதியின் 04 வயது மகனும் குட்டி இளவரசருமான ஜோர்ஜின் பெயர் ஐ.எஸ். கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்கள் சமூக வலைத்தளத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும், இந்த மிரட்டல் செய்தி அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.எஸ். அமைப்பினரின் அடுத்த இலக்கு குட்டி இளரவசர் ஜோர்ஜ் என்பது இந்த செய்தியின் மூலம் உறுதியாகியுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், குட்டி இளவரசர் படிக்கும் பாடசாலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு