டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை முயற்சி; அறுவருக்கு சிறைத் தண்டனை

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயன்ற 06 பேருக்கு பத்தரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், எமில்காந்தன் உள்ளிட்ட 09 பேரை விடுதலை செய்துள்ளார்.

1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலைக்குள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் கூரான ஆயுதமொன்றினால் படுகாயம் ஏற்படுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தண்டனை விதிக்கப்பட்ட 06 குற்றவாளிகளில் ஒருவர் நேற்று மன்றில் ஆஜராகியிருந்த நிலையில், ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்து தண்டனையை அமுல்ப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

1998ஆம் ஆண்டில் தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் களுத்துறை சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த போது, அந்த காலப்பகுதியில் அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தா, கைதிகளை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோது தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு