கொள்கை அடிப்படையில் ஒன்றிப்போனால் கூட்டுச் சேர்வோம்

கொள்கை அடிப்படையில் ஒன்றிப்போக கூடியவர்களுடன் தான் கூட்டு சேருவோம். அவர்களுடன் தான், தமிழ்த் தேசிய அரசியலைச் சரியாகக் கொண்டு செல்வோமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், யுத்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்து கொண்டு, தான், பத்மினி சிதம்பரநாதன் உள்ளடங்கலாக, நாடாளுமன்றத்தை முடக்கிப் போராடியதாகவும், அந்த நற்பெயரை வைத்து, சம்பந்தன் இன்று உள்ளதாகவும், அன்று போராடிய தாம், வீதியில் நிற்பதாகவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குத் தேவையற்றவையை தான் பேசமாட்டேன் என சம்பந்தன் சொன்ன பிறகே வெளியேறியதாகவும், இப்போது மீண்டும் தாம் கூட்டுச் சேர்ந்த பின்னர், எம்முடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் பேரம்பேச்சுக்கு விலை போனால், மீண்டும் பிளவு ஏற்படும். அப்போதும் தாமே மோசமானவர்களாக வீதியில் நிற்போம் என்றும், மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதால், கூட்டுச் சேர்வது தொடர்பில் சிந்தித்தே முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு