மாவீரர் தினம் அனுஷ்டிக்க ஏற்பாடு

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு, ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்திலுள்ள ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்தே, மாவீரர் செயற்பாட்டுக்குழு கடந்த சனிக்கிழமை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்த அரசியல் கட்சியினரையும் இச்செயற்பாட்டுக் குழுவில் உள்ளீர்ப்பதில்லையெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் களமாக மாவீரரையோ துயிலுமில்லத்தையோ எவரும் பயன்படுத்த கூடாதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு