மீண்டும் முதலிடத்தில் கோஹ்லி

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

கடந்த 10 நாட்களாக தென்னாபிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் முதல் இடத்தில் இருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தமது 32ஆவது ஒருநாள் சதத்தைப் பெற்று கோஹ்லி, மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன், இரண்டாம் இடத்தில் ஏபி டி வில்லியர்ஸ் உள்ளார்.

மூன்றாம் இடத்தில் டேவிட் வோர்னரும், நான்காம் இடத்தில் பாபர் அசாமும், ஐந்தாம் இடத்தில் குயின்டன் டி குக் உள்ளனர்.

அதேநேரம், பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில், பாகிஸ்தானின் ஹசன் அலி முதல் இடத்தில் இருப்பதுடன், இரண்டாம் இடத்தில் இம்ரான் தாஹிரும், மூன்றாம் இடத்தில் ஜஸ்ப்ரிட் பும்ராவும், நான்காம் இடத்தில் ஜோஸ் ஹசல்வுட்டும் 5ம் இடத்தில் ககிசோ ரபடாவும் உள்ளனர்.

இதேவேளை சகல துறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலாம் இடத்தில் பாகிஸ்தானின் மொஹமட் ஹஃபீஸ் உள்ளதுடன், இரண்டாம் மூன்றாம் இடங்களில், சகில் அல் ஹசன் மற்றும் மொஹமட் நாபி ஆகியோர் உள்ளனர்.

நான்காம் இடத்தில் பென் ஸ்டாக்ஸ{ம், ஐந்தாம் இடத்தில் இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தீவ்ஸ{ம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு