சீனா – இலங்கை உறவு வலுவடைய வேண்டும்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டுமென சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முக்கியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இரண்டு நாடுகளும் கூர்ந்து அவதானத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு, அங்கு, சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளதுடன், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு பலப்படுத்தப்படுவதுடன், இரண்டு நாடுகளின் பரஸ்பர அரசியல் நம்பிக்கையும் அத்தியாவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு