வேலணை மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானம் திறப்புவிழா (Photos)

வேலணை மத்திய கல்லூரியின் பெற்றோர்தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கூடைப்பந்தாட்ட மைதானத்தினையும் திறந்து வைத்துள்ளார்.

நேற்று (31) முற்பகல் 10.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் சிவகாமி கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார், ஆளுநரின் உதவி செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் ஊர்காவற்துறை கஞ்சதேவா கடற்படைத்தள கட்டளை அதிகாரி கப்டன் எல்.ஏ.ஆர்.டி.ஹெட்டியராய்ச்சி, பிரதேச செயலாளர் வேலணை செந்தில்நாதன், பழைய மாணவி திருமதி ஸ்கந்தகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய ஆளுநர், நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் தென்னிலங்கையிலிருந்து இங்கு ஆளுநராக பணி செய்கின்றேன். இந்த பாடசாலை சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கரா அவர்களினால் நாடுமுழுவதும் உருவாக்கப்பட்ட 54 பாடசாலைகளில் ஒன்றாக உருவாக்கப்பட்ட பாடசாலை. இந்த காலப்பகுதியில் வட மாகாண மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் முன்னைய காலத்தில் எவ்வாறு தமிழ் மக்கள் கல்வியிலே சிறந்து விளங்கி உயர் பதவிகளை வகித்திருந்தார்களோ. பேராசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர், அரசியல்வாதிகளாக இருந்தார்களோ அவ்வாறான நிலைமை மீண்டும் உருவாக வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசும் வடமாகாண சபையும் இணைந்து நல்ல ஆசிரியர்களை தந்திருக்கின்றார்கள், நல்ல புத்தகங்களை தந்திருக்கின்றார்கள், நல்ல கட்டங்களை தந்திருக்கின்றார்கள். நவீன வசதிகளை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். அதனை மாணவர்கள் சரியாக பயன்படுத்தி கல்வியில் உயர வேண்டும். படித்ததன் பிற்பாடு அவர்கள் தமது தாய் தந்தையரை நல்ல முறையில் பார்க்க வேண்டும் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வட மாகாணத்தில் வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் மழை பெய்கின்றது. ஏனைய மாதங்கள் கடும் வெப்பம் நிலவுவதனால், இங்கு பாரிய குடிநீர் பிரச்சினை காணப்படுகின்றது. இன்று இங்கே மழை பெய்து கொண்டிருக்கின்றது. அதனை நாம் நேசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு