கோப்பாய் – கைதடி வீதியில் ஆசிரியரின் சடலம் மீட்பு (Photos)

யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் பாலத்தடியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

என்பி-எச்பி-6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த சங்கத்தானை, சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 03 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டராவார்.

இவர் யாழ். சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியருமாவார். இவர் நேற்றிரவு 9.00 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவம் விபத்தா? கொலையா? தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு