நுவரெலியாவில் இயல்புநிலை பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியிலும், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும், அதிகமான பனி மூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவரும் நிலையில், நிரம்பியுள்ள பனிமூட்டத்தினால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை மிக அவதானத்துடன் செயற்படுத்த வேண்டும் என்றும், சாரதிகள் வாகனங்களில் மின்விளக்குகளை (ஹெட்லைட்) ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு