பனிமூட்டமாக பகுதிகளில் பயணம் மேற்கொள்ளும் வாகன சாரதிகள், மண்சரிவு மற்றும் விபத்துகள் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில், பல்வேறு இடங்களில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாகவே, பொலிஸார் இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர். ஹட்டன் -அவிசாவளை, நுவரெலியா – ஹட்டன், தலவாக்கலை – நாவலப்பிட்டி, நுவரெலியா – கண்டி மற்றும் நுவரெலியா – வெலிமடை ஆகிய பகுதிகளில் வாகனம் செலுத்தும் வாகன சாரதிகளுக்கே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.