மக்களின் தேவைகருதி 2800 மெற்றிக்தொன் எரிபொருளை சந்தைக்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் களஞ்சியசாலை முனையம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படுமென அதன் நிர்வாக இயக்குனர் சஞ்ஜீவ விஜேரத்ன தெரிவித்துள்ள அதேவேளை, தரமற்ற எரிபொருளை திருகோணமலை ஐ.ஓ.சியில் இறக்குவதற்கு தயாராகும் செயற்பாடு ஒன்று நிலவுவதாகவும் அதற்கு அரசாங்கம் இடமளிக்காது எனவும் சுதந்திர சேவையாளர் சங்க பெற்றோலிய கிளையின் செயலாளர் ஜயந்த பரேயிகம தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.