மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பில் கருத்தறிய நடவடிக்கை

மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களைக் கேட்டறிவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாகாண சபை எல்லை நிர்ணய குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாகாண சபை தேர்தல் தொகுதிகளில் எல்லைகளை வகுக்கும் நோக்கில் 05 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த குழு கடந்த மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதுடன், கடந்த இரண்டாம் திகதி வரை, குறித்த குழுவினரால் மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக மக்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

சிரேஷ்ட மட்டத்திலான கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கையை எதிர்வரும் 9ஆம் திகதி அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபை எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் சமன் எஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாகாண சபை எல்லை நிர்ணய குழுவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கொண்ட அறிக்கையை 04 மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு