மலையகத்தில் நீர்நிலைகள் குறித்து அறிவுறுத்தல்

மலையகப் பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள், நீர்நிலைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டுமென அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, நீர்நிலைகளில் வைக்கப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடப்பதே சிறந்தது என்றும், தற்போது நீடித்துவரும் சீரற்ற வானிலை காரணமாக, நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துவரும் போது, திடீரென நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளையும் திறந்துவிட வேண்டிய சூழல் ஏற்படுவதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கலாம். எனவே, ஆறுகளில் குளிப்பதற்காகச் செல்வோர், மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை வானிலை குறையும்வரை ஆறுகளில் குளிப்பதைத் தவிர்த்துக்கொள்வதே சிறந்தது. குறிப்பாக வெளிமாவட்டங்களிலிருந்து, நுவரெலியா, கண்டி, மாத்தளைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வானிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு