விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உயர்நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தன்னைக் கைது செய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடக் கோரி, காமினி செனரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போதே, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினார்.

மேலும், தேவையான வாக்குமூலத்தை வழங்க எதிர்வரும் 9ம் திகதி காமினி செனரத் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக உள்ளதாகவும்அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ள இதேவேளை, காமினி விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவாராயின் அவரைக் கைதுசெய்வது தொடர்பான பிரச்சினை ஏற்படப் போவதில்லை எனவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் அடுத்தகட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு