எரிபொருள் இறக்குமதி விடயத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது – அமைச்சர் அர்ஜுன

தரம் குறைந்ததென நிராகரிக்கப்பட்ட எரிபொருள் கப்பலை நாட்டிற்கு பெற்றுக்கொள்ளுமாறு அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பெற்றோலியவள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

தட்டுப்பாடின்றி எதிர்வரும் 9ஆம் திகதி வரை நாட்டிற்கு தேவையான எரிபொருளை வழங்க முடியும் எனவும் சில சதித்திட்டக்காரர்கள் தவறான கருத்துக்களை மக்களிடம் கூறிவருவதாகவும் பெற்றோலிய வள அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இப்பிரச்சினைக்கு எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படும் என்பதுடன், தரமற்ற எரிபொருளை வழங்க தாம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு