ஏழ்வர் உயிரிழப்பு சம்பவம்; சாரதிக்கு விளக்கமறியல்

முந்தல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்ப்படுத்திய போது, எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, முந்தல், 10ஆம் கட்டைப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் 07 பேர் உயிரிழந்ததுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்த விபத்துக்கு சாரதியின் கவனயீனமே காரணமாக இருக்கலாமெனத் தெரிய வந்துள்ள நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு