25 கிலோவுக்கு அதிகமாக அரிசி வாங்குபவர்களின் கவனத்திற்கு

25 கிலோகிராமுக்கு அதிகமான அரிசியைக் கொள்வனவு செய்பவருக்கு, ஒரு கிலோகிராம் அரிசியை 73 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து கடந்த இரண்டு மாத காலத்துக்குள், 1,300 மில்லியன் ரூபாய் பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைவாக, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் பணிப்புரையின் பேரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை, 20,000 மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டு, அத்தொகை முழுவதும், சந்தைக்கு விநியோகத்துக்கென அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டரிசியானது, கிலோகிராம் 74 ரூபாய்க்கு விற்கப்பட்டுவரும் நிலையில், 25 கிலோகிராமுக்கு மேற்பட்ட அரிசியைக் கொள்வனவு செய்பவருக்கு ஒரு கிலோகிராம் 73 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு