வியாழனுடன் வழமைக்குத் திரும்பும் எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினை

நாட்டில் நிலவியுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினையானது எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் வழமைக்குத் திரும்புமென பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 02 தினங்களுக்குள் 2,500 மெற்றிக்தொன் எரிபொருள், சகல எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும், இதன் பின்னர் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொண்டு, அதனை விநியோகிக்காத எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாமென சகல எரிபொருள் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், எரிபொருள் பிரச்சினை காரணமாக, அசௌகரியங்களை எதிர்நோக்கிய மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறைந்த தரத்திலான எரிபொருள் ஏற்றிவந்த கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு எனக்கு பலவாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும், தான் அதனைச் செய்யவில்லை என்றும், இதுவரை காலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் கப்பலொன்று தாமதமாகி வருகை தந்ததில்லை என்பதுடன், கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி கொண்டுவரப்பட்ட பெற்றோல் கப்பலானது, இரு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரும் தரச்சான்றிதழைப் பெற முடியாது போனதாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு