ஸ்ரீ.சு.க.வின் யோசனைகள் கையளிக்கப்பட்டது

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கான, தமது யோசனைகள் அடங்கிய அறிக்கையை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கல்வி, சுகாதார சேவைகள் உள்ளிட்ட மக்களுக்குப் பயன்தரக்கூடிய யோசனைகள், குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்து, மக்களுக்குச் சலுகைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு