தமிழக மீனவர்கள் கைது

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நால்வரை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் அவர்களில் சுப்பையா (35), ராஜ்குமார் (32), கஜேந்திரன் (40), சகுபர் (38) ஆகிய 04 மீனவர்களை, எல்லை தாண்டிவந்து அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு