மழையால் யாழில் 622 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த ஒருவாரமாக நிலைகொண்டிருந்த தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிக மழை வீழ்ச்சினால் யாழ். மாவட்டத்தில் 622 குடும்பங்களில் 2107 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக செயலாளர் சுகுணரதி தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், உடுவில், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, சண்டிலிப்பாய், உடுவில் ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழ் நிலப்பரப்பில் வாழும் குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 17 குடும்பங்களின் 67 அங்கத்தவர்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இடைத்தாங்கல் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான சமைத்த உணவினை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மற்றும் மாவட்ட செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி தேவைகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு