அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்கா பாராட்டு

இலங்கையில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மிகவும் சிறந்த செயற்பாடென ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான பிரதி இராஜாங்க செயலாளர் தோமஸ் செனன் தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்கம் குறித்த முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், இந்த முயற்சிகள் பேண்தகு அடிப்படையில், துரிதமாக நடைபெற வேண்டும் எனவும் தோமஸ் செனன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இணங்கிக் கொள்ளப்பட்ட அடிப்படையில் இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஐ.எஸ் போன்ற தீவரவாத அமைப்புக்கள் மற்றும் வடகொரியாவின் அனுவாயுத பரிசோதனைகளால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு