மக்கள் சேவையாளர்களைத் தெரிவு செய்யுங்கள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்களுக்காக குரல் கொடுக்ககூடிய மற்றும் சேவை செய்யக் கூடிய ஒருவரை தெரிவுசெய்ய வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

ஹட்டன் பகுதி பெருந்தோட்டங்களுக்கு நேற்று விஜயம் செய்து மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், கடந்த கால உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெளிப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் நிலை இருந்ததாகவும், வாக்களித்தப் பின்னர் அபிவிருத்திகளுக்கு அவர்களை தேடியலையும் நிலை இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதிவாரியான தேர்தல் என்பதனால், உங்கள் பிரதேசத்திலிருந்து உங்களுக்கான பிரதநிதியை தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, உங்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது முன்வந்து நிற்கக்கூடிய உங்கள் பிரதேச அபிவிருத்தியை திறம்பட செய்யக்கூடிய ஒருவரை தெரிவு செய்யுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு