வர்த்தக நிலையங்களுக்கு அரிசி அனுப்பி வைப்பு

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 136 கோடி ரூபா பெறுமதியுடைய 20,000 மெற்றிக்தொன் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசியே இலங்கை சதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதமளவில் மேலும் 50,0000 மெற்றிக்தொன் நாட்டரிசி, 30,000 மெற்றிக்தொன் சம்பா அரிசி மற்றும் 50,000 மெற்றிக்தொன் வெள்ளை கெக்குலு அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு