யாழில் 125 பேர் முகாம்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

வடமாகாணத்தில் பலத்த மழை பெய்து வருவதால் யாழ். மாவட்டத்தில் 125 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த 125 பேரில் சுமார் 70 பேர் வல்வெட்டித்துறை, பொலிகண்டி பொது நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர்கள் யுத்த காலத்தில் பலாலி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு