டெல்லியில் பாடசாலைகளை மூடுமாறு உத்தரவு

இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டியுள்ளதால் பாடசாலைகளை மூட டெல்லி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாகவும், டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசடைந்த காற்று சூழ்ந்து காணப்படுவதாகவும், அங்கு நிலவும் தெளிவற்ற வானிலைக்கு பனியோ புகைமூட்டமோ காரணம் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தீபாவளிக்கு பின்னர் டெல்லியில் காற்றின் தரம் இரண்டாவது முறையாக மோசமான நிலையை எட்டியுள்ளதால், டெல்லி விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெளிவான வானிலையின்மை காரணமாக விமான ஓடுதளம் மூடப்பட்டுள்ள அதேவேளை, சில விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லியில் மோசமான வானிலை காரணமாக பாடசாலைகளுக்கு சில நாட்கள் விடுமுறை அறிவிக்கவும் கல்வி அமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவுரை வழங்கியுள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு