நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடும் நாமல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு வருமாறு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், ஜனவரியில் தேர்தல் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அத்தேர்தல் ஜனவரியில் நடக்குமா என்பது எங்களுக்குச் சந்தேகமாகவே இருப்பதாகவும், தேர்தலுக்குச் செல்வது தற்போது உசிதமானதல்லவென நினைக்கும் அரசாங்கம், மூன்றாம் தரப்பின் ஊடாக, வழக்குத் தாக்கல் செய்து, தேர்தலை ஒத்திப்போடுவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிரணியானது, அடுத்த பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு, கலந்துரையாடி வருவதாகவும், எனவே, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் தம்முடன் இணைந்து போட்டியிட முடியும் எனவும், அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு