அமைச்சர்களிடையே கடும் வாக்குவாதம்

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக, கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையில், கடுமையான வாதங்கள் இடம்பெற்றதாகவும், பெற்றோலியப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் அர்ஜுன, அமைச்சரவைக்கு விளக்கமளிக்கும் போது இடைமறித்த அமைச்சர் தயாசிறி, இந்நிலை, ஜனாதிபதியை இக்கட்டான நிலைக்குக் கொண்டுசெல்லும். மக்கள், ஜனாதிபதியையே திட்டுவதாகக் குறிப்பிட்டதனால் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன்போது உரையாற்றிய, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, இது சிறிய பிரச்சினை அல்ல. எண்ணெயைக் களஞ்சியப்படுத்தி வைக்காத நிலையே, இப்போது உள்ள பிச்சினை. ஆனால், இது ஒரு மாபியா பிரச்சினை என்பதை மறக்கவேண்டாம் என்பதுடன், இதை இலகுவாக எடுக்கவேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சர் தயா கமகே, அமைச்சர் அர்ஜுனவுக்கு ஆதரவாக உரையாற்றியதாகவும், பின்னர் உரையாற்றிய அமைச்சர் அர்ஜுன, இந்தப் பிரச்சினை தொடர்பாக, உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், எண்ணெய் ஸ்ட்ரைக் என்று ஒரு குறுச்செய்தி பரப்பப்பட்டமை தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாம் எப்படியாவது இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு