சட்ட விதிமுறைகளுக்கு அமையவே உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் திட்டமிட்டு காலதாமதப்படுத்தவில்லை. தனது கடமைமையை நான் செய்துவிட்டேன். சட்ட விதிமுறைக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் ஆரம்பமானது. சபை அமர்வின்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியில், அமைச்சர் கையொப்பம் இட்டுள்ளார். எனினும் வர்த்தமானி இன்னும் அச்சிடப்படவில்லை. அவ்வாறெனின் தேர்தலை காலதாமதப்படுத்தவே, அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறதா? எனக் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு