இந்திய மீனவர்களுக்குத் தொடர்ந்து விளக்கமறியல்

கடந்த மாதம் வெவ்வேறு தினங்களில் கைதான இந்திய மீனவர்கள் 35 பேரையும், எதிர்வரும் 21ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மீனவர்களை விடுதலை செய்வதற்குரிய சட்ட ஆலோசனை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. இதையடுத்து, இது தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்ததைத் தொடர்ந்துஇ வழக்கை ஆராய்ந்த நீதவான், விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை நேற்று காரைநகர் கடற்படையினர் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறையின் யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு