பெற்றோல் கப்பல் வருகிறது

40,000 மெற்றிக்தொன் பெற்றோல் தாங்கிய கப்பலொன்று இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பல் வந்தடைந்ததும் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு முழுமையான தீர்வு காணப்படுமென பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, 15,000 மெற்றிக்தொன் பெற்றோலுடன் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.

இந்த இரண்டு கப்பல்களிலும் கொண்டுவரப்படும் பெற்றோல் அடுத்த 20 நாட்களுக்கு போதுமானது என பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளதுடன், நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ள பெற்றோலின் தரம் தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு வரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகன சாரதிகள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு