பெற்றோர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது?

அரச மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் 05 பெற்றோரினால் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

சைட்டம் மருத்துவ கல்லூரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகோரி அவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினர் மற்றும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

நேற்று ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைய ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சைட்டம் நிறுவனத்தின் நெருக்கடி தொடர்பாக தீர்வை பெறுவதற்கு பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தலைமையிலான குழுவொன்றை ஜனாதிபதி அண்மையில் ஸ்தாபித்தமைக்கு அமைய, மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் இரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு