அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியைக் குறைக்க நடவடிக்கை

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான வரியைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் நெத்தலி மீதான வரி 11 ரூபாவில் இருந்து 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு மீதான 40 ரூபா வரி 39 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் மீதான 40 ரூபா வரியும் 39 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, பருப்பு, கருவாடு, ஃபாம் எண்ணெய், மரக்கறி எண்ணெய் ஆகியவற்றின் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு