வழமைக்குத் திரும்புகிறது பெற்றோல் விநியோகம்

பெற்றோல் விநியோகம் இன்றைய தினத்திற்குள் வழமைக்குத் திரும்புமென பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதுடன், 40000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய நவெஸ்கா லேடி கப்பல் நேற்று முன்தினம் வந்ததுடன், முத்துராஜவலையில் அது நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, நேற்று அது சோதனை செய்யப்பட்டதுடன், அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என்பதால், நேற்று இரவு முதல் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படுவதாக செய்தி பரவியதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெற்றோல் நெருக்கடி நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு