2025இல் அனைவருக்கும் வீடு பெற்றுக் கொடுக்கப்படும்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டாகும் போது அனைவருக்கும் வீடு என்ற கருத்திட்டக் கனவு உண்மையில் பிரதிபலிக்குமென வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கு கடந்த ஆண்டைவிட 66 வீதத்திற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வீடமைப்புத் துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி அதன் முழுமையான பிரதிபலனை நாட்டு ஏழை மக்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு