மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்படுவதற்கு, அரசியல் தலையீடே காரணமென சிவில் அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக பதவியேற்று சென்ற நிலையில், இன்னமும் நிரந்தர அரசாங்க அதிபர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.