இலங்கையின் அபிவிருத்திக்கு தென்கொரியா உதவ முன்வருகை

நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க தென்கொரிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இதற்கமைய அபிவிருத்தி பணிகளின் நிமிர்த்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தென்கொரியா கடனாக வழங்கவுள்ளதுடன், நியாயமான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தக்கடன் தொகை 2017 – 2019ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படவுள்ளது.

கொரிய நாட்டுக்கான ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் பொருளாதார புரிந்துணர்வு நிதியம் இந்த கடனை வழங்குவதாகவும், நிவாரண வட்டியின் அடிப்படையின் கீழ் 10 வருடங்கள் முதல் 40 வருடகாலத்தினுள் குறித்த கடன் தொகை திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் வழங்கப்படவுள்ளதுடன், கொரிய அரசாங்கத்துடன் இதற்கான உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரியா – இலங்கைக்கு இடையில் நிலவிவரும் நட்புறவு மற்றும் பொருளாதார புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த கடன் உதவி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு