வேட்புமனுக் கோரலுக்குத் தயார்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு கோருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 27 ஆரம்பமாகின்ற வாரநாட்களில் வேட்புமனு கோரவுள்ளதாகவும், வேட்புமனு கோரப்பட்ட தினத்திலிருந்து இரண்டு வாரகாலம் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தயாரிப்பு பணிகளுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ள அதேவேளை, வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக மூன்றரை நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடுகளுக்கு அமைய உள்ளுராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதிக்கும் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு