அடிப்படை வசதிகளின் தமிழகத்தில் இலங்கை அகதிகள்

தமிழகத்தின் விருதுநகர், குல்லூர் சந்தை இலங்கை அகதிகள் முகாமில் கழிப்பறை, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கு வசிக்கும் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகேகுல்லூர் சந்தை கிராமத்திலுள்ள அகதிகள் முகாமில் 305 இலங்கை அகதிகள் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதிலுள்ள பலர் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கூலி தொழிலாளர்களாக பணி புரிந்து வருகின்றனர். இந்த முகாமில் அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கழிப்பறை சேதமடைந்ததால் பயன்படுத்த முடியாத நிலையுள்ளதுடன், பெரிய வள்ளிக்குளத்திலிருந்து குல்லூர் சந்தை வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் பேருந்து, இரு சக்கர வாகனங்கள் ஊர்ந்தே செல்லும் நிலையுள்ளது.

அதேபோல், அகதிகள் முகாமிலுள்ள தெருக்களில் முறையான சாலை வசதி இல்லாமையால், மழை நேரங்களில் வீட்டின் முன் தண்ணீர் தேங்கி விடுகிறது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்ததால், சிறுவர்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு தனியார் மூலம் இந்த முகாமில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க இயந்திரங்கள் மற்றும் தொட்டிகள் பொருத்தப்பட்ட போதிலும், மின்இணைப்பு கொடுக்காததால் அவை உபயோகமற்ற நிலையில் உள்ளதால், இங்குள்ள நியாய விலை கடை முன்பு தேங்கிய தண்ணீரில் நின்றே பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகின்றனர். இவ்வாறு சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், கடும் அவதிப்பட்டு வருவதனால், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கு வசிக்கும் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு