தேசிய பாதுகாப்பு பலவீனமாகும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை

தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையிலோ அல்லது பாதுகாப்பு படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாராஹேன்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதுடன், தற்போது படையினரின் நடவடிக்கைகளுக்கு பயன்படாத காணிகளை வடக்கு, கிழக்கு மக்களுக்கு மீண்டும் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் அத்தகைய காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

படைவீரர்களுக்கு எதிராக எந்தவகையான விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை என்பதுடன், படையினரின் கௌரவத்திற்கு பாதிப்பான வகையில் அத்தகைய எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு