பெற்றோல் நெருக்கடி விசாரணை அறிக்கை தயார்

இலங்கை முழுவதும் ஏற்பட்டிருந்த, பெற்றோல் நெருக்கடி தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு, தனது அறிக்கையை நாளை (14) சமர்ப்பிக்குமென, அக்குழுவின் உறுப்பினரும், விஷேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி முதல் ஏற்பட்ட இந்த பெற்றோல் நெருக்கடி, கடந்த வார முடிவு வரை நீடித்திருந்ததைத் தொடர்ந்து, அமைச்சர்களான சரத் அமுனுக, அர்ஜுன ரணதுங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவே, தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், இக்குழுவால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில், லங்கா இந்தியன் ஒயில் கம்பனி மீது தவறு கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் நிலைப்பாட்டின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே பொறுப்புக்கூற வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாளர் ஜானக ராஜகருணா, இந்திய அரசாங்கத்துக்கு, இலங்கை அச்சப்படுகிறது எனவும், அதனாலேயே தங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு