ரயிலில் மோதி ஒருவர் பலி – மீசாலையில் சம்பவம்

யாழ். மீசாலை ரயில் நிலையத்துக்கு அண்மையில் இடம்பெற்ற ரயில் விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீசாலை ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள புத்தூர் சந்திப் பகுதி ரயில் கடவையை, மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட ஒருவரே, நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், சாரதியாகக் கடமையாற்றும், கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் ஞானயுகன் (வயது 38) என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு