இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் 506 முறைப்பாடுகள்

இவ்வாண்டின் முதலாவது காற்பகுதியில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு, 506 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவை விசாரணைக்காக முன்னகர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது காலாண்டுக்கான அறிக்கையிலேயே குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஜனவரியில் 212 முறைப்பாடுகளும், பெப்ரவரியில் 96 முறைப்பாடுகளும், மார்ச்சில் 289 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆணைக்குழுவால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் 99 வழக்குகள், நீதவான் நீதிமன்றங்களிலும், 306 வழக்குகள் மேல் நீதிமன்றங்களிலும் நிலுவையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு