வெள்ளி நள்ளிரவு 1,806 பேர் கைது

வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், குறைந்தது 1,806 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர, குறித்த நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 3.00 மணிவரை இடம்பெற்றதாகவும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், 16,000க்கும் மேற்பட்ட பொலிஸார் பங்குபற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் காரணமாக 962 பேர் கைதானதுடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 758 பேரும், பல்வேறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டுவந்த வேறு 86 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதுடன், சட்டவிரோத மருந்துகள், மதுபானம் தொடர்பில், 948 தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, 03 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போக்குவரத்துக் குற்றங்களுக்காக 5,744 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு