காங்கோவில் ரயில் விபத்து – 33 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயிலொன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு நேற்றைய தினம் எரிபொருளை ஏற்றிச் சென்ற 13 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயிலில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர்.

குறித்த ரயில் மலை சிகரம் ஒன்றின் ஊடாக பயணித்த போது தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 33 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு