உள்ளூராட்சி தேர்தலில் பாடம் புகட்டுவோம் – மஹிந்த சீற்றம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் பொருட்டு சுதந்திரக் கட்சியின் அனைத்து படைகளும் தம்முடனேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கூட்டம் அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளதுடன், தமக்கு ரணிலுடனோ, மைத்திரிபால சிறிசேனவுடனோ தொடர்பு இல்லை எனவும், தாம் மக்களுடன் மாத்திரமே தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சிக்கு காட்டிக்கொடுக்கப்பட்டு விட்டதாகவும், சுதந்திரக் கட்சியின் கொள்கையை காப்பாற்றுவது கூட்டு எதிர்க்கட்சியே எனவும் தெரிவித்துள்ளதுடன், இந்த நிலையில் இந்த அரசாங்கத்தை தேற்கடிக்கும் முதலாவது வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு