ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 31 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று காலை ஹம்பந்தோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்போது 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.