புத்தளத்தில் டெங்கு அதிகரிப்பு

புத்தளம் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலால் நேற்றைய தினத்திற்குள் மாத்திரம் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.நகுலநாதன் தெரிவித்துள்ளதுடன், 145 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்திய அதுகாரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பருவ மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளதுடன், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு