நந்திக்கடலில் நீரேரியால் வயல் நிலங்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நீர்மட்டம் அதிகரித்து வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.

இதனைக் கருத்திற்கொண்டு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல் முகத்துவார பகுதி நேற்றைய தினம் கடலுடன் வெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக குறித்த முகத்துவார பகுதி கடலுடன் வெட்டி இணைக்கபட்டுள்ளதன் மூலம் குறித்த பிரதேசத்தின் வயல் நிலங்களில் புகும் நீரை கட்டுப்படுத்த முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு